கரூர் மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணைக்கு அருகே ஆற்றின் பிடித்து விற்பனை செய்து வரும் மீன் சந்தை மிகவும் புகழ்பெற்றது.
புரட்டாசி சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் ஒரு சில ஆசைவ பிரியர்கள் மீன்கள் வாங்க குவிந்து வந்தனர், பொதுவான ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விற்பனை அதிகமாக காணப்பட்டது.
கரூர், திருச்சி, நாமக்கல் என மூன்று மாவட்ட மக்களையும் ஈர்க்கும் வகையில் இந்த மீன் சந்தையில் ஆற்றில் பிடிக்கப்பட்ட மீன்கள், உயிருடன் விற்பனை செய்வதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
கடந்த வாரம் விற்பனையே இல்லாத இருந்த நிலையில் மூன்று மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், கெண்டை,கெளுத்தி,ஜிலேபி,குரவை உள்ளிட்ட பல்வேறு வகை ஆற்று மீன்களை வாங்கி சென்றனர்,விற்பனைக்கு
வைக்கப்பட்ட மீன் வழக்கத்தைவிட ஐம்பது ரூபாய் கூடுதலாக விற்கப்படுகிறது என்று கூறுகின்றனர்.
காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர் கொடிவேல் என்பவரின் வலையில் ஏழு கிலோ மதிப்பு தேக்க சிக்கிய லோகு கெண்டை மீன் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.