Skip to content

கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

  • by Authour

கரூர் அருகே தனியார் கல்லூரியில் புதிதாக பணியில் சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி முகாமை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் துவங்கி வைத்தார்.

கரூர் – ஈரோடு சாலையில் நொய்யலை அடுத்த வேட்டமங்களம் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 141வது தீயணைப்போர்

பயிற்சியை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் துவங்கி வைத்தார்

இதில் தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 650 வீரர்களுக்கு சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 இடங்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் இக்கல்லூரியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது

இதில் 100 தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இன்று துவங்கி 90 நாட்கள் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சியின் இறுதியில் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தீயணைப்பு நிலையங்களுக்கு பணிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

error: Content is protected !!