கரூரில் நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா பகுதியில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்களில் நம்பர் இல்லாமலும் வந்த 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் நம்பர் பிளேட் மற்றும் நம்பர் இல்லாத வாகனங்களுக்கு புதிதாக நம்பர் ஸ்டிக்கர் ஒட்டி வகையில் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, நம்பர்
பிளேட் இல்லாத வாகனங்களை பார்வையிட்டார். பின்னர் நம்பர் பிளேட் இல்லாமல் வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது, வாகன விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். நம்பர் மற்றும் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை இயக்க கூடாது. விபத்து ஏற்படும் நேரங்களில் அடையாளம் காண்பது சிரமமாகும். இதனால் உங்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும். இனிவரும் காலங்களில் நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை இயக்க கூடாது. என்றார்.
மேலும் இளைஞர்கள் வேண்டுமென்றே இரு சக்கர வாகனங்களில் நம்பர் பேட்டை எடுத்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதாகவும் இதனால் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறினார்
