கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகள் அமைந்துள்ளன. அந்தக் கல்குவாரிகளில் கட்டிட பணிக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி மற்றும் அரளை கற்கள் ஆகிய கட்டுமான பொருட்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் கட்டிடப் பணிகளுக்கு தேவையான மேற்கண்ட கட்டுமான பொருட்களின் விலையை தனியார் கல்குவாரி உரிமையாளர்கள் தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதை கண்டித்து, கட்டிட பொறியாளர்கள் சங்கம்
சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய கட்டுனர்கள் சங்கத்தின் கரூர் மையம், கரூர் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம், கரூர் கட்டிட பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் கூட்டமைப்பினர் சுமார் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பி, விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.