மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு மதுபான விற்பனைக்கு அரசு தடை வைத்துள்ளது இந்த நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தனம் கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டிய உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர்கள் தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்ட கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனைகள் ஈடுபட்டனர் அப்போது 74 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 77 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2641 மது பாட்டில்கள் மற்றும் ஒரு ஆம்னி வேன் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பாக தென்னிலை காவல் நிலைய சரகம் வால்நாயக்கன்பட்டி பகுதியில் 3 நபர்களிடமிருந்து 1216 பாட்டில்கள் ஒரு ஆம்னி காரும் கைப்பற்றி வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது மேலும் அரசு உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவர்த்தனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை பற்றி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக எண்ணான 04324296299 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.