fரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார்டு பங்களா தெரு பகுதியில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பாதாள சாக்கடை நீருடன் கலந்து சாலையில் வெளியே செல்வதால் துர்நாற்றம் வீசுவது உடன் குடிநீரில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விநியோகிக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள மூதாட்டிகள், குழந்தைகள், பொதுமக்கள் என பலர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
மாநகராட்சி நிர்வாகத்திடம் மற்றும் 22 ஆவது வார்டு கவுன்சிலர் பிரேமா அவர்களிடம் பலமுறை புகார் அளித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுத்து மாநகராட்சி நிர்வாகம் தூய்மையான குடிநீரை வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.