கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருந்தது.
கரூர் ஆண்டாங் கோவில் மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவர் நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி கரூர் ஈரோடு சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.