கரூரில் நேற்று நடந்த வருமான வரி சோதனையின் போது சில இடங்களில் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் சோதனை நடத்த முடியாமல் வருமான அதிகாரிகள் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மீண்டும் பாதுகாப்பு கேட்டு பின்னர் சோதனை ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தள்ளுமுள்ளுவில் குமார் மற்றும் பால விநாயகா உரிமையாளர் தங்கராஜ் உள்ளிட்ட சிலர் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் அளித்த புகாரின் பேரில், கையால் தாக்கியது, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மூன்று வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் என்ற அடிப்படையில் திமுக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் கரூர் மாவட்ட காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.