கரூரில் திமுக பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தடபுடல் மட்டன் சிக்கன் அசைவ விருந்து பரிமாறப்பட்டதால் தொண்டர்கள் மகிழ்ச்சி.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் இன்று 21 இடங்களில் திமுக சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இன்று கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிக்கன் பிரியாணி மற்றும் மட்டன்
பிரியாணி, முட்டை உள்ளிட்ட தடபுடல் விருந்து நடைபெற்றது.
இதில் குறிப்பாக கரூர், ராயனூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி துணை மையம் மேற்கு பகுதி செயலாளருமான தாரணி சரவணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வருகை தந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 100 கிலோ மட்டன் வருவல், 100 கிலோ சிக்கன் வருவன், 600 முட்டை, நாட்டுக்கோழி குழம்பு ரசம் தயிர் என தடபுடலாக வாழை இலையில் அறுசுவை அசைவ விருந்து வைத்து அசத்தினர்.