கரூர் மாவட்ட திமுக செயலாளர் V. செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படி, கரூர் நாடாளுமன்ற தொகுதி ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டம் நேற்று கரூர் திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பியும் திமுக துணைப்பொதுச் செயலாளருமான ஆ. ராசா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்ட கரூர் நாடாளுமன்றத்திற்குட்பட்ட
சட்டமன்ற தொகுதிகளின் திமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தனது உரையை ஆரம்பித்த எம்பி ஆ. ராசா கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மணப்பாறை நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டார். ஆனால் கரூர் மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜியின் பெயரை குறிப்பிடவேயில்லை. இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இடையில் சிறையில் இருந்து கொண்டு கரூரில் மாநாடு போன்ற ஒரு கூட்டத்தை நடத்தி கொண்டிருக்கும் செந்தில்பாலாஜியை நான் உங்களோடு சேர்ந்து வாழ்த்துகிறேன் என்றார் ஆ ராசா..
