இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் முறைத் திருத்தம் 2024 மேற்கொள்வது தொடர்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் காண வரைவு வாக்காளர் பட்டியல் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டார்.
கரூர் சட்டமன்ற தொகுதியில் 2,33,577 அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2,08,398 கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,07,227 குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 2,23,221 என கரூர் மாவட்டம் முழுவதும்
மொத்தம் 8,72,423 பட்டியலை வெளியிட்டார். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் பத்திரத்தை இடமாற்றம் சம்பந்தமாக 27.10.23 முதல் 09.12.23 வரை மனுக்கள் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த வருடம் 05.01.24 தேதி வெளியிடப்பட உள்ளது.