மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 613 மாணவ, மாணவிகளும், கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொங்கு அறிவியல் கலைக்கல்லூரியில் 1,176 மாணவ, மாணவிகள் என மொத்தம் 1,789 பேர் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர்.
பிற்பகல் 2.00 மணியளவில் தேர்வு தொடங்க உள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் மையங்களை நோக்கி விரைந்து வருகின்றனர்.
பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5:20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
இதையடுத்து பிற்பகல் 1.15 மணிக்குள் தேர்வறையில் மாணவ, மாணவிகள் அமர வேண்டும். பிற்பகல் 1:30 மணி முதல் 1.45 மணி வரை முக்கிய அறிவுறுத்தல் வழங்கி நுழைவு சீட்டு சரிபார்க்கப்படும். பிற்பகல் 1.45 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு 2.00க்கு மணியளவில் தேர்வு தொடங்கி எழுதி வருகின்றனர்.