தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கரூரை அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஜூடோ, மல்யுத்தம் உள்ளிட்ட 7 விளையாட்டுகள் 15
நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 254 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெருகின்றனர்.
தொடக்க விழாவின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் உமா சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர். ஆட்சியர் பிரபு சங்கர் ஒவ்வொரு போட்டிகளையும் தனித்தனியாக தொடங்கி வைத்து, பயிற்சியில் பங்கேற்றவர்களை பாராட்டி சென்றார். மாணவ மாணவிகளுடன் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மல்யுத்த பயிற்சியில் சிறப்பாக விளையாடிய பள்ளி மாணவிகளை பாராட்டினார்.