Skip to content
Home » கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

கரூர் மாவட்ட எல்லைக்கு வந்த மேட்டூர் அணை நீர்…. விவசாயிகள் மகிழ்ச்சி..

கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 335 வது நாளாக இன்றும் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது.

நேற்று காலை முதல் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். துவக்கத்தில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு

படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று மாலை வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இன்று கரூர் மாவட்ட எல்லை ஆனா வேலாயுதம்பாளையம் பகுதிக்கு நீர் வந்தடைந்தது இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!