முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நல குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது அரசியல் கட்சியினர் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே கரூர் மாவட்ட கட்சி காங்கிரஸ் கட்சிசார்பில் மாமன்ற உறுப்பினர் ஸ்ரீபன் பாபு மாநகரத் தலைவர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட தலைவர் சின்னசாமி .முன்னிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.