இந்து சமய அறநிலையத் துறை ஆணையின்படி கரூர் மாவட்ட அறநிலையத்துறை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள புகழ் சோழர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறையின் தலைவராக பரணி பாஸ்கரன் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், பி.ஏ குமார், காந்தி, ஷோபனா, குமார் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும்,
கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கரூர் உதவி ஆணையர் ஜெயதேவி, தாந்தோணி உதவி ஆணையர் நந்தகுமார், செயல் அலுவலர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.