கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள அண்ணா நகர் 3 வது தெருவில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிபவர்
ரமேஷ்பாபு இவரது மனைவி அன்பழகி இவர் லாலாபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டு அண்ணாநகர் வீட்டில் வசித்து வருகின்றனர்,
இவர்கள் கடந்த 5 ஆம் தேதி கணவர் பணிக்குச் சென்ற பிறகு அன்பழகி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார்,
இந்நிலையில் அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஆசிரியை அன்பழகி வீட்டின் கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்,
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது
சூட்கேஸில் வைத்திருந்த 43 சவரன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பதைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்,
இச்சம்பவம் குறித்து அன்பழகி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரைத் தொடர்ந்து குளித்தலை
போலீசார் வழக்கு பதிவு செய்தனர், தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்,
விசாரணையில் அரசு பள்ளி ஆசிரியையின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும்
ரத்தினவேல் இவரது மனைவி சுகந்தி வயது 39. சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்ததில்
சுகந்தி சூட்கேஸில் உள்ள நகைகளை திருடியதாக தெரியவந்துள்ளது, தொடர்ந்து அவரிடம் செய்த விசாரணையில் 43 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்,
தொடர்ந்து சுகந்தியை கைது செய்து குளித்தலை அரசு தலைமை மாவட்ட மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைப்பு
சுகந்தி மீது திருச்சி பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்து ஏமாற்றிய திருச்சி பகுதிகளிலுள்ள காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் குளித்தலை அண்ணா நகர் பகுதியில் வாடகைக்கு வந்ததாகவும், இவரது கணவர் கேபிள் நிறுவனத்தில் பணி புரிவதாகவும் இவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கூறி
முசிறி பகுதியில் இருந்து குளித்தலை அண்ணா நகர் ஆசிரியை அன்பழகி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.