கரூரை சார்ந்த மருத்துவர் செந்தில் வேலன் தயாரிப்பில், குணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சீசா. நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகரில் உள்ள கலையரங்கம் திரையரங்கில் இத்திரைப்படம் வெளியாகியது. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் திரைப்படத்தை காண திரையரங்கம் வருகை தந்தனர். அவர்களுக்கு அவரது நண்பர்களும், ரசிகர்களும் பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்து
வரவேற்பு அளித்து, வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து அனைவரும் திரைப்படம் பார்க்க ஆர்வமுடன் சென்றனர். முன்னதாக திரையரங்கத்தில் பறை இசை இசைக்கப்பட்ட போது, அங்கு வந்த மதுப் பிரியர் இசைக்கு ஏற்ப நடமாடி உற்சாகமடைந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் குணா, சீசா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் சொந்த ஊரான கரூரில் திரைப்படம் வெளியிட திரையரங்கம் கிடைக்காமல் சிரமப்பட்டதாகவும், இன்று ஒரு நாள் மட்டும் கலையரங்கம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் சென்னை, கரூர், கொல்லிமலை, கோவை உள்ளிட்ட இடங்களில் 45 நாட்கள் இத்திரைப்படம் எடுத்ததாகவும், நடிகர், நடிகைகள் சிறப்பாக நடித்து இருப்பதாகவும், கிரைம் திரில்லர் திரைப்பட ரசிகர்களுக்கு இத்திரைப்படம் ரொம்ப பிடிக்கும் என்றார்.