Skip to content
Home » கரூர் அருகே அரசு அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி… 20 பேர் மீது வழக்கு….

கரூர் அருகே அரசு அனுமதியின்றி ஆடல்-பாடல் நிகழ்ச்சி… 20 பேர் மீது வழக்கு….

  • by Senthil

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது .கோவில் திருவிழாவின் போது சம்பந்தப்பட்ட பகுதியில் அரசு அனுமதி இன்றி ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தும் உத்தரவை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் கூடிய ஒலிபெருக்கியுடன் அரசு அனுமதியின்றி அப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தினார்கள். ஆடல் ,பாடல் நடன ம் நிகழ்ச்சியின் போது அறுவருக்கத்தக்க பாடல்களை பாடி, ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் எஸ்ஐ சரவணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது போலீஸ் அனுமதியின்றி ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்துவரிடம் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்டனர். அப்போது ஆடல் ,பாடல் நடன நிகழ்ச்சிக்கு நாங்கள் அனுமதி பெறவில்லை என்றும், ஆனால் ஆடல் ,பாடல் நடன

நிகழ்ச்சி நடத்துகிறோம் என்றும் தெரிவித்தனர். உடனடியாக ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியை நிறுத்துமாறு போலீசார் தெரிவித்தனர் .பின்னர் அரசு அனுமதி இன்றி பாடல் நடன நிகழ்ச்சி நடத்தியதாக மூலிமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் ,ஜெயக்குமார், ராஜா ,ராஜ்குமார் ,லோகேஷ் ,சஞ்சய், தனபால் ,கவின் ,பிரசாத் ,மூர்த்தி, ராஜேந்திரன் மற்றும் ஆடல் பாடல் நடன குழுவைச் சேர்ந்த கரூர் மாவட்டம் பீச்ச பட்டியைச் சேர்ந்த அறிவழகன், ஆடியோ உரிமையாளர் சேலம் சங்ககிரியைச் சேர்ந்த விஜயகுமார் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியை போலீசார் பாதியில் நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!