மத்திய அரசு முப்பெரும் சட்டங்கள் ஆன இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இருந்த முப்பெரும் சட்டங்களின் பெயர்களை மக்களுக்கு புரியாத, உச்சரிக்க இயலாத வகையில் பெயர் மாற்றம் செய்த ஒன்றிய அரசினை கண்டித்து தாந்தோன்றி மலை பகுதியில்
உள்ள நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முப்பெரும் சட்டங்களின் பெயர்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசினை கண்டித்தும் கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஆனது ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.