கரூர் மாநகராட்சி சார்பில் மாமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளம், மாநகராட்சி ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் ,ஆகியவற்றை சேர்த்து ரூ. 21 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை கரூர் மாநகராட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கவிதா தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. மழையினால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட்டுகள்
,போர்வைகள், பாய்கள், சப்பாத்தி, நாப்கின்கள் போன்றவை சேகரிக்கப்பட்டு ரெண்டு கண்டெய்னர் லாரிகளில் இன்று அனுப்பி வைக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சுதா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.