கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிக்கவும், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்யவும், பிறப்பு, இறப்பு சான்று பெறவும், புதிய குடிநீர் இணைப்பு பெறவும், குடிநீர் இணைப்பு மற்றும் தெரு விளக்கு சம்மந்தமான புகார்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்வு காணுதல் தொடர்பாக சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேயர் கவிதா கணேசன் தலைமையில், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்
ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான மனுக்களை நேரடியாக மாநகராட்சி மேயர் இடம் வழங்கினர் பொதுமக்கள் தரப்பில் கொடுக்கப்படும் மாநகராட்சி தொடர்பான கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணும் வகையிலும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாநகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.