கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விவரத்தை தர மறுக்கும் பாஜக அரசின் கைக்கூலியாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து கட்சியின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.