கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் கிராமத்தில் மாயனூர், கரட்டுப்பட்டி செல்லும் சாலையின் தனியார் காற்றாலையில் இருந்து மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின்கம்பகள் நடப்பட்டுள்ளன.
தொடர் கனமழையின் காரணமாக சாலை ஓரத்தில் நடப்பட்டிருந்த பல மின் கம்பங்கள் சாய்ந் நிலையில் உள்ளது. இதனால் சாலையோர பச்சை மரக்கிளைகளில் மின்ஒயர்கள் உரசி தீப்பொறி பறந்ததால் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.
எப்போது கீழே விழும் என்ற நிலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சாலைகள் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடந்தவாறு செல்கின்றனர்.
மேலும் மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளதால் மின் கம்பிகள் அருகில் உள்ள மரங்களில் உரசியவாறு இருந்ததால் தீப்பொறி பறந்து வருவதாலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேங்கல் பகுதியில் அதிக அளவு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன. காற்றாலை உதிரி பாகங்கள் எடுத்துச் செல்லும்போது அதிக அளவில் விபத்துகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி காற்றாலை வேண்டாம் என பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பெய்த மழைக்கு தனியார் காற்றாலையில் இருந்து மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு புதிதாக நடப்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.