கரூர் மாநகரின் மையப்பகுதியில் தென்னிந்திய திருச்சபையின் பிஷப் சாலமன் துரைசாமி கலை, அறிவியல் கல்லூரி கடந்தாண்டு துவங்கப்பட்டு கரூர் மாநகரை சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பயின்று வருகின்றனர். இரண்டாம் ஆண்டில் அடியை எடுத்து வைத்துள்ள கல்லூரியில் பிகாம், பிகாம் சிஏ, பிசிஏ, பிபிஏ படிப்புகளுக்கான வகுப்பறைகளை கொண்ட புதிய கட்டிட
திறப்பு விழாவானது இன்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி – தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்லின் சந்திரசேகர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உமேஷ் சாமுவேல், பேராசிரியர்கள், பாதிரியார்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.