கரூர் மாவட்டம் புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வேடசந்தூர் பகுதியில் இருந்து 30 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு,
கல்லூரி பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஈசநத்தம் அருகே உள்ள சின்ன தொப்பாரப்பட்டி பகுதியில் பேருந்து ஓட்டுனர் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மாணவ, மாணவிகள், ஓட்டுனர் உட்பட 7 நபர்களுக்கு காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கல்லூரி பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி மாணவ,மாணவிகள் காயம் ஏற்பட்டது கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.