Skip to content
Home » கரூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் ….

கரூர் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் ….

  • by Authour

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட கருவூலம் மூலம் 4,165 ஓய்வூதியர்களும், சார்நிலை கருவூலங்களான அரவக்குறிச்சியில்703 ஓய்வூதியர்களும், கரூரில் 301 ஓய்வூதியர்களும், குளித்தலையில் 1830 ஓய்வூதியர்களும், கிருஷ்ணராயபுரத்தில் 250 ஓய்வூதியர்களும், கடவூரில் 223 ஓய்வூதியர்களும் என் 7472 ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களின் ஓய்வூதியபலன்கள். புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் மருத்துவ செலவினத்தொகை. சிறப்பு சேமநல நிதி. செயற்கைக்கால் வேண்டியது, நிலுவைத்தொகைகள், ஊதிய முரன்பாட்டால் ஏற்பட்ட ஓய்வூதிய முரன்பாடுகள் கலைதல். உள்ளிட்ட 19 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. வரப்பெற்ற மனுக்களை விரைந்து முடிக்க சமந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியர்களின் மீதும் அவர்களின் கோரிக்கை மனுக்கள் மீதும் கனிவுடன் பரிசீலனை செய்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கூறினார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் ஓய்வூதியர்களிடமிருந்து 14 புதிய கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்து அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் போது சென்னை ஓய்வூதிய இயக்கநரக துணை இயக்குநர் மதிவாணன். கணக்கு அலுவலர் ராஜசேகர். மாவட்ட கருவூல் அலுவலர் திருவேங்கடம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அமலி சாந்த குமாரி. தனிதுணை ஆட்சியர்(ச.பா.தி) கைபுதீன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *