தமிழ்நாடு அரசு நிலத்தடி நீரை உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீடுகள், நிறுவனங்கள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழை நீரை சேகரிக்க வேண்டும். இதனால் கோடை காலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை அனைத்து கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும்.இதை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்புமழைநீர் சேகரிப்புகுறித்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கொடிய அசைத்து துவக்கி வைத்தார்.
200க்கும் மேற்பட்டகல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டுமாவட்ட
ஆட்சியர் வளாகத்தில் இருந்து அரசு கலைக் கல்லூரி வரை பேரணியாக சென்றனர்.
மழைநீர் சேகரிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சி பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் உதவி நிர்வாக பொறியாளர்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலக பணியாளர்கள், அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.