கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமானது,
அதர்மத்துக்கும், தர்மத்திற்கும் இடையே நடைபெற்ற ‘மகாபாரதப்போர் ஆடி மாதம் 1-ஆம் நாள் தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி -18 அன்று முடிவுக்கு வந்தது என்ற ஐதீகத்தை கடைப்பிடித்து வரும் பொதுமக்கள்.
இந்த நிலையில் கரூரில் உள்ள படிக்கட்டு துறை ஆற்றங்கரையில் தேங்காய்க்குள் வெல்லம், அவல், ஏல்,
பாசிப்பயறு, ஏலக்காய் என 5 வகையான பூரணங்கள் வைத்து அந்த தேங்காவை தீயில் சுட்டு அதை அப்பகுதியில் உள்ள அம்மன், விநாயகர் மற்றும் இஷ்ட தேவதைகளுக்கு படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டனர்.
நோய் நொடி இன்றி மக்கள் ஆரோக்கியமாக இருப்பது, ஆடி மாதத்தில் இருந்து நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மனித சமுதாயம் சிறப்பாக வாழ வேண்டும் என அம்மனை வேண்டி இந்த தேங்காய் சுடும் வைபவத்தில் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள்,புதுமண தம்பதியினர் என பலர் ஈடுபட்டனர்.