கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை ஒழித்து ஒப்பந்த முறையை புகுத்தும் தமிழக அரசின் அரசாணை எண் 152 ஐ திரும்ப பெற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம். இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை ஊழியர்கள் சங்கம் ( சிஐடியு ) சார்பில் தண்டபாணி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகராட்சிகளில் 20 வகையான நிரந்தர பணியிடங்களை ஒழித்து தனியார் கைகளில் அளிக்கும் அரசாணை 152 ஐ உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி சுய உதவிக்குழு ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் நிரந்தரம் செய்ய வேண்டும்.
கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் இரண்டு நாள் ஊதியத்தை பிறிமுதல் செய்யும் சட்ட விரோத போக்கினை கைவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் பணியாளர்கள் என பல கலந்து கொண்டனர்