Skip to content

கரூர், நடு ரோட்டில் கார் எரிந்து சாம்பல்

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக கரூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார். சர்வீஸ் செய்யப்பட்ட வண்டியை மெக்கானிக் தனசேகர் என்பவர் ஓட்டி பார்ப்பதற்காக எடுத்து வந்துள்ளார்.

அப்போது கரூரிலிருந்து மூலமங்கலம் பிரிவு வரை சென்ற தனசேகர் திரும்பி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளவாபாளையம் என்ற பகுதியில் வந்தபோது காரின் முன் பக்கத்தில் புகை வருவதைக் கண்ட அவர் உடனடியாக காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கி உள்ளார்.

கார் திடீரென தீப்பற்றி முழுவதும் எரிய தொடங்கியது இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர்.இருப்பினும் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது.
நெடுஞ்சாலையில் கார் தீ விபத்து நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!