கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட வாலிபால் கழகம் மற்றும் ரோட்ராக்ட் இணைந்து நடத்தும் நான்காம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் சென்னை, மதுரை, கோவை ,திருச்சி, கரூர் உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொண்டனர் இப்போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகிறது இன்று நடைபெற்ற போட்டியில் திருச்சி ஜமால் கல்லூரி அணியும், கோவை கற்பக கல்லூரி அணியும் மோதியதில் 25 க்கு 17
மற்றும் 25-க்கு 19என்ற புள்ளி கணக்கில் கோவை கற்பக கல்லூரி அணி வெற்றி பெற்றது மற்றொரு போட்டியில் சென்னை சென் ஜோசப் கல்லூரி அணியும் லயோலா அணியும் மோதியதில் 25 க்கு 18 25க்கு 19 என்ற புள்ளி கணக்கில் சென்னை சென் ஜோசப் கல்லூரி அணி வெற்றி பெற்றது வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசை சுழல் கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியினை கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து ரசித்தனர்.