கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளை நடுரோட்டில் விட்டு விட்டு ஒருவருக் கொருவர் தகராறில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
யார் முதலில் முந்தி செல்வது என்பதில் இரண்டு தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றதால் ஒன்ரோடு ஒன்று உரசிக் கொண்டது. இதனால் நடுரோட்டில் ஓட்டுநர் மற்றும்
நடத்துனர்கள் தகராறில் ஈடுபட்டனர் இது பயணிகள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முசிறியில் இருந்து கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், திருச்சியில் இருந்து கரூர் நோக்கி தனியார் பேருந்தும்
புலியூர் தனியார் பொறியியல் கல்லூரியை கடக்கும் போது, யார் முந்தி செல்வது என்பதில் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பேருந்தை ஒட்டிச் சென்றுள்ளனர். அப்போது, இரண்டு பேருந்துகளும் முந்திச் செல்லும் போது லேசாக உரசிக் கொண்டுள்ளது. இதனால், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகள் பேருந்தில் உள்ளனர் என்ற பொறுப்பு இல்லாமல் நடுரோட்டில் இறங்கிச் சென்று தகராறில் ஈடுபட்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுநர்களின் இந்த பொறுப்பற்ற செயலைக் கண்டு பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.