கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சாலை வழியாக, திருச்சியில் இருந்து கரூர் வழியாக ஈரோடு செல்லும் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 80 அடி சாலையிலிருந்து வெளியே
வந்த கனரக லாரி ஒன்று EB ஆபிஸ் சிக்னல் அருகில் அரசு பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதியதில், பேருந்தில் லேசான சேதம் ஏற்பட்டது.
கனரக லாரி வேகமாக வந்து பேருந்து மீது மோதியதால் சேதத் ஏற்பட்டதாக கூறி அரசு பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுனரிடம் பேருந்தை சேதப்படுத்தியதற்கு இழப்பீடு கேட்டார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேருந்தின் நடத்துனர் ஓட்டுநரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். இதனால் சுமார் அரை மணி நேரம் கரூர் – கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.