கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கும் மணப்பாறை பகுதிக்கும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை முசிறி பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கரூர் வழியாக தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து மணப்பாறை பகுதிக்கு சென்றது இதில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் பயணம் செய்து செய்தனர்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர் இதில் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் அதே நேரத்தில் வேறு பேருந்து இல்லாததால் ஒரே
பேருந்தில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.
பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனே உடனடியாக போக்குவரத்து துறை பள்ளி மாணவர்கள் பயணம் செய்யும் வகையில் பள்ளி செல்லும் நேரத்திற்கு மட்டும் சிறப்பு பேருந்து அமைத்து விபத்தை தடுக்க வேண்டும் என்று அப்பகுதிப்பது மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்