கரூர் ஈரோடு சாலை ரெட்டிபாளையம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான பஸ்பாடி கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இன்று பஸ்பாடி கட்டுமான நிறுவனத்தின் பின்பகுதியில் பஸ்பாடி கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் மற்றும் பெயிண்ட் டப்பா வைக்கப்பட்டிருந்தது திடீரென தீப்பிடித்து எறிய ஆரம்பித்துள்ளது. அதிக அளவில் புகை மூட்டத்துடன் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தீயணைப்பு
துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனம் மூலம்
பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து துறிதனமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர காவல் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.