கரூர் அடுத்த ஆட்டையாம்பரப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தேசிய ரொட்டி தினத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியில் பயிலும் கேட்டரிங் மாணவர்கள் தயார் செய்த 300 வகையான பிரட் வகைகள் கண்காட்சியில் இடம்பெற்றன. இந்த
கண்காட்சியை அமெரிக்காவின் கார்னிவல் சொகுசு கப்பலில் பணியாற்றிவரும் ஜெஃப் ஹேமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேக் வெட்டி தொடங்கி வைத்தார்.
இதயம், ஐஸ் கோன், டபுள் லேயர், ட்ரிபிள் லேயர், மல்டி லேயர், வாத்து என விதவிதமான பல்வேறு வடிவத்தில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பிரட் வகைகளை கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையாளராக இடம் பெற்று கண்டு ரசித்து வியந்து பார்த்தனர். இதில் கல்லூரியின் தாளாளர் ராமசாமி, முதல்வர் ஸ்டீபன் ராஜா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.