கரூரில் ஆணழகன் போட்டி நடைபெற்றது -12 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் அனுமதியுடன் கரூர் மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
நடைபெற்றது. இதில் 12 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் ஒவ்வொரு பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடித்த ஆணழகன்களுக்கு பதக்கமும், பரிசும், சுழற்கோப்பையும் வழங்கி பாராட்டப்பட்டது. மிஸ்டர் கரூர் பட்டத்தை கரூர் சேர்ந்த கிருபாகரன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இரண்டாவது இடத்தை லாலாபேட்டையைச் சார்ந்த முகமது அப்சல், மூன்றாவது இடத்தை கரன் குமார் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது.