நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை அனைவரும் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்நிலையில் கரூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க. பரமத்தி அருகே தென்னிலை கடைவீதி பகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சார வாகனத்தில் நின்றபடி பேசிய ஜி கே வாசன் அரவக்குறிச்சி பகுதி விவசாயம் நிறைந்த பகுதி குறிப்பாக முருங்கை காய்க்கு பேர் போன பகுதியாகும் பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றால் முருங்கை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும் என பேசினார்.
மேலும் கரூர் மாவட்டத்தில் 105 டிகிரிக்கும் மேல் வெயில் தாக்கம் இருந்து வருவதால் வெயிலில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜிகே வாசன் மற்றும் பாஜக வேட்பாளர் செந்தில் நாதனுக்கு அப்பகுதியில் செய்து வந்த நிர்வாகி ஒருவர் தனது ஐஸ்சை பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதன் மற்றும் ஜி கே வாசன் இருவருக்கும் ஐஸ் வழங்கி வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது சாப்பிட்டுச் செல்லுங்கள் என கூறினார். இருவரும் ரசித்து ருசித்து வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஐஸ் சாப்பிட்டு சென்றனர்.
குறிப்பாக தென்னிலை பகுதியில் அதிக வெயில் தாக்கம் காரணமாக தேர்தல் பிரச்சாரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே பொதுமக்களை அழைத்து வந்ததால் வெயில் தாக்கம் தாங்க முடியாமல் அனைவரும் மரத்தில் அடியில் நின்றும் தலையில் துணிகளை சுற்றியும் நின்று கொண்டிருந்தனர்.