ஆன்லையன் விண்ணப்பம் இன்று வரை ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் பணிமனை திறப்புக்கு அதிகாரிகள் ஆட்சேபனை செய்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கரூர் மக்களவை தொகுதியில் பிஜேபி வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.
கோவை சாலையில் தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் ஆன்லைனில் செய்யப்பட்ட விண்ணப்பம் இன்னும் அனுமதி ஒப்புதல் வழங்கப்படவில்லை, இந்த நிலையில் தேர்தல் பணி மணை திறப்புக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி கெளரி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு பணி மனை திறந்து கொள்ள அதிகாரி அறிவுறுத்தி சென்றுள்ளார்.
பின்னர் பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதன் மதியம் வேட்பு மனு தாக்கல் செய்வதால் அங்கிருந்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். குறிப்பாக இன்று பிஜேயினர் பணிமனை திறப்பிற்காக யாக பூஜைகள் செய்து பணிமனையை திறப்பிற்காக நல்ல நேரம் பார்த்து நின்றுகொண்டிருந்த போது பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அனுமதி வழங்கவில்லை, அனுமதி பெற்றபின் பணிமனையை திறந்து கொள்ளுங்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.