குளித்தலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், கரூர் அடுத்த வடக்கு பாளையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த இருசக்கர (Pulsar) வாகனம் அந்த பஸ் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தவர் புலியூர், கணேசபுரத்தை சேர்ந்த ராம்குமார் (27) என்று தெரியவந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பசுபதிபாளையம் போலீசார் உயிரிழந்த இளைஞர் ராம்குமார் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி னர்.
சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.