கரூர், தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் இலவச ஊட்டச்சத்து ஆலோசனை
மையத்தை தொடங்கி வைத்து, பார்வையிட்டார். கண்காட்சியில் பாரம்பரிய உணவு பண்டங்கள் மற்றும் மனித உறுப்புகளின் செயல்பாடுகள் பற்றிய செயல் மாதிரிகள் இடம்பெற்றிருந்தன.
ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில் பயிலும் மாணவர்களின் கை வண்ணத்தில் காய்கறிகளில் சிற்ப வேலைப்பாடுகள், நெருப்பு மற்றும் நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் உணவு தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், பாரம்பரிய உணவான பழைய சாதம் என்று கூறப்படும் ஐஸ் பிரியாணி கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.