கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த மாதம் 29 முதல் நவம்பர் 28 வரை நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது.
கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த மாதம் 29 முதல் நவம்பர் 28 வரை நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல் கொடியசைத்து துவங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்தப் பேரணி கோட்டாட்சியர் அலுவலகம்
துவங்கி பேருந்து நிலையம் ரவுண்டானா, ஜஹகர் பஜார் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் வாக்காளர்களுக்கு 18 வயது நிறைவடைந்த புதிய வாக்காளர் பெயர் பதிவு செய்வதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு வருடத்திற்கு ஜனவரி ஒன்றாம் தேதி, ஏப்ரல் ஒன்றாம் தேதி, ஜூலை ஒன்றாம் தேதி, அக்டோபர் ஒன்றாம் தேதி என நான்கு வாய்ப்புகள் வழங்கப்படுகிறது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் அவசியம் குறித்தும், வெளிநாடு வாழ் வாக்காளர்கள் பெயர் பதிவு செய்தல் குறித்தும் மாணவ மாணவிகள் விழிப்புணர் ஏற்படுத்தினர்.
இந்த பேரணியில் கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், வட்டாட்சியர் குமரேசன் மற்றும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.