உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இன்று உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் தனியார் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் சார்பில் கரூர் பேருந்து நிலையம் மனோரா கார்னர் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை கரூர் நகர துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷகிரா பானு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணி கரூர் பேருந்து நிலையம் மனோகரா கார்னர் பகுதியில் இருந்து கோவை சாலை வழியாக மருத்துவமனையில் நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு இரு சக்கர பேரணையில் மருத்துவர்கள் தலைக்கவசம் குறித்து விழிப்புணர் பதாகைகளை வாகனத்தில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்