மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின்
முன்புறமுள்ள அக்னி சிறகுகள் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் அவரின் உருவப்படத்ற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் அவரின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் அறிவழகன் தலைமை வழங்கினார் மேலும் செயலாளர் தேவா, பொருளாளர் ஆசை தம்பி உட்பட சங்க உறுப்பினர்கள் பங்கேற்றுந்தனர்.