தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் நலத்திட்டங்கள் மற்றும் உணவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள
அன்பாலயம் ஆதரவற்றோர் இல்லத்தில் இன்று திமுக மாநகர் செயலாளர் கனகராஜ் ஏற்பாட்டில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினர். உணவு வழங்கியதற்கு பள்ளி மாணவி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், திமுக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என ஏராளமான கலந்துகொண்டு மத்திய உணவை வழங்கினார்.