சென்னை மற்றும் கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தின ர் குறிப்பாக சென்னையில் நடைபெற்ற சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தனர். அப்போது மின்சாரத்துறை அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்.
இன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை
சட்ட விரோதமாக அவரை கைது செய்து சித்திரவதை செய்த பாஜக மோடி அரசு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து அமைச்சரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்திற்கு சீல் வைத்ததை கண்டித்து அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.