உலக தண்ணீர் தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கரூர் அடுத்த ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ஏழாம் வகுப்பு பள்ளி மாணவன் விஷ்வக் நித்தின் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து ரோடு அமராவதி ஆற்று படுகையில், தனது பெற்றோர் மற்றும் குழுவினருடன் இணைந்து ஆற்றில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்குகள்
குறித்த செயல் விளக்க பிரச்சாரத்தை நடத்தினார். பள்ளி மாணவன் விஷ்வக் நித்தின் ஆற்றில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார். அது குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். இதைதொடர்ந்து அவர் கரூரில் உள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் மற்றும் வாங்கல், மோகனூர், ஆகிய பகுதியில் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர் நிலைகளில் இயற்கை உபாதையை கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.