திருக்குறள் குறித்த விழிப்புணர்வும், அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் தற்போது குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடமும் 1,330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் ஆர்வம் பரவலாகியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலமரத் தெருவில் வசித்து வருவர் கோபி நாத் – சுமதி தம்பதியின் மகன் அகிலேஷ், கரூர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் இவர் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக, தங்கு தடையின்றி ஒப்பிவிக்கும் ஆற்றல் பெற்றுள்ளார்.
திருக்குறள் பற்றிய சிறப்புகள், குரல் எண் சொன்னால் குறளை சொல்லும் ஆற்றலும் பெற்று விளங்குகிறார்
மேலும் சிறுவயதில் இருந்து திருக்குறள் பற்றி அதிக ஆர்வமும் கொண்ட அகிலேஷ் தொடர்ந்து திருக்குறள் தொடர்பான பல்வேறு சாதனைகள் செய்வதற்கு முயற்சி செய்து வருவதாக கூறினார். இதற்காக அவர் 2 வருடங்களாக கடினமாக படித்ததாகவும், இதற்கு தனது பெற்றோர், மற்றும் ஆசிரியர்கள் ஊக்கம் அளித்ததாகவும் அகிலேஷ் கூறுகிறார்.