கரூர் மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்துசாமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் நவலடி கார்த்திக் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நவலடி கார்த்திக்கை கரூர் நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கரூர் நகர காவல் நிலையம் முன்பு ஏராளமான அதிமுகவினர் குவிந்துள்ளனர்.
